<

 

Latest News
மணிமண்டபத் திறப்பு விழா
Author admin
Sunday, Jun 5, 2016 7:45 am
மணிமண்டபத் திறப்பு விழா
 
உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது . உரும்பிராய் கற்பகவிநாயகர் ஆலயப் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு ஆலய பரிபாலன சபைத் தலைவர் வங்கியாளர் சி. நந்தகுமார் தலைமை தாங்குவார். லண்டனைச் சேர்ந்த கு. விவேகானந்தன் தம்பதியர் மண்டபத்தைத் திறந்து வைத்தனர். நிகழ்வின் அதிதிகளாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா. வேதநாதன், ஆளுநரின் செயலர் இ. இளங்கோவன், கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கற்பக விநாயகர் ஆலயப் பிரதம குரு வண. தியாக கிருஷ்ணமூர்த்திக் குருக்கள், யாழ். சின்மயமிஷன் முதல்வர் வண. ஜாக்கிரத் சைதன்யர் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர் . உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவியரின் வரவேற்பு நடனம், கற்பக விநாயகர் ஆலயப் பொருளாளர் சி. சிவராமின் வரவேற்புரை, செயலாளர் ப. சேயோனின் நன்றியுரை என்பனவும் சிறப்பு நிகழ்வாக புகழ் பெற்ற தவில் நாதஸ்வர வித்துவான்களின் கச்சேரியும் இடம்பெற்றது.

No comments posted...
Leave a Comment
* Name
* Email (will not be published)
*
* Enter verification code
* - Reqiured fields
 
Top News
மணிமண்டபத் திறப்பு விழா
Sunday - Jun 5, 2016 7:45 am
உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது .   Read more...
மணி விழா கானும் ஆசான்
Saturday - Feb 13, 2016 7:45 am
மணி விழா கானும் ஆசான்   Read more...
செல்லப்பா சனசமுக நிலையம்.  விளையாட்டு போட்டி புகைப்படங்கள்
Saturday - Jun 6, 2015 6:26 am
செல்லப்பா சனசமுக நிலையம்.

விளையாட்டு போட்டி புகைப்படங்கள்   Read more...
மரண அறிவித்தல்-புவனேஸ்வரி கனகரத்தினம்
Tuesday - Jun 2, 2015 6:14 pm
உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள
திருவருள் என்ற இல்லத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பைத் தற்போதைய
வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கனகரத்தினம் 01.06.2015 மாலை
காலமாகிவிட்டார்.   Read more...
வருடாந்தப் பெருந்திருவிழா
Saturday - Jun 28, 2014 6:04 am
வருடாந்தப் பெருந்திருவிழா   Read more...